சிவபெருமான், சுந்தரரை ‘பாடு’ என்று மட்டும் சொல்லாமல், தமிழில் பாடு! ஏன் தமிழில் பாட வேண்டும்?
இசை இறைவனின் சிம்மாசனம்! அவன் ஆலயம்! சகல வழிபாடுகளும் இசைக்குள் அடக்கம்! இசையே தீபம்! இசையே தூபம்! இசையே பூ! இசையே நீர்! இசை சகல அழுக்குகளையும் கழுவும் புனித நீராட்டு!