Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை: #தாய்த்தமிழில்_வழிபாடு | திருப்போரூர் முருகன் கோவில் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு

திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் *செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழில் வழிபாடு செய்து நிகழ்வினை தொடங்கி வைக்கவிருக்கிறார்கள்

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையிலும், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் “தாய்த்தமிழில் வழிபாடு” என்ற தொடர் நிகழ்வினை முன்னெடுக்கவிருக்கிறது.

அதனை முன்னிட்டு, 1965-இல் அன்னைத் தமிழ் காக்க மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவு நாளான (செப்டம்பர் 3 ) நாளை காலை 10 மணிக்கு *திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் *செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழில் வழிபாடு செய்து நிகழ்வினை தொடங்கி வைக்கவிருக்கிறார்கள்.

மேலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் தொகுதி, மாவட்ட, நாடாளுமன்றப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்கள் இணைந்து இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு முதன்மைக் கோயிலுக்குத் தத்தம் குடும்பங்களுடன் சென்று தமிழில் வழிபாடு செய்யக் கோரி வழிபடவும், கோவில் நிர்வாகிகளையும், பூசாரிகளையும் தமிழ் வழிபாட்டைச் செய்யுமாறு வலியுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

"தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு"
இது கோரிக்கையல்ல, நமது உரிமை!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

20 comments

  1. Vetri Velan

    இலக்கு ஒன்றுதான் இன்பத்தின் விடுதலை நமது கலாச்சாரம் பண்பாடு மொழி இறை மீட்டெடுப்போம் இணைவோம் நாம் தமிழராய்

  2. Kannapiran Kannaprian

    நம் மன்னர்கள் கட்டிய
    கோயில்களில் தமிழில்
    போற்றி பாட வேண்டும்
    நம் மண்ணில் நம் கலை
    கலாச்சாரம் பண்பாடு போற்றி புகழும் நாம் தமிழர் கட்சி வெற்றிக்கு
    தமிழா நாம் ஒன்றிணைந்து செயல்பட
    வேண்டும்.

  3. Kali Muthu

    நமக்கான காலம் விரைவில் கனிந்துருகும் அண்ணன். உன் கத்தலும் கதறலும் இங்கு எவருக்கும் புரிவதில்லை. தாய் தமிழ் மொழியை காப்போம்.

  4. Con V

    இன்று 03-09-22 காலை 11:30 மணி அளவில் மண்ணச்சநல்லூர், லால்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாக ஆணையரிடம், அன்னை தமிழிலில் அர்ச்சனை எனும் அரசு ஆணைப்படி, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, இனி அர்ச்சனை, குடமுழுக்கு (கும்பாபிசேகம்) போன்றவற்றை தமிழ் ஓதுவார்களால், தமிழில் நடத்துமாறு நினைவூட்டு கடிதம் வழங்கப்பட்டது. பிறகு அன்னை தமிழ், அழகு தமிழில் அர்ச்சனையும் நடத்தப்பட்டது. கேட்பதற்கு அரசர்கள் காலத்தில் இறைவனை போற்றி பாடியது போல் இருந்தது மெய் சிலிர்க்க வைத்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*