மனிதர்கள் நம்பிக்கையால் வாழ்கிறார்கள், அந்த நம்பிக்கையாலேயே வீழ்கிறார்கள்! #இறையன்பு துரோகச்சுவடுகள்
மனிதர்கள் நம்பிக்கையால் வாழ்கிறார்கள், அந்த நம்பிக்கையாலேயே வீழ்கிறார்கள். நம்பிக்கை, நல்ல காலை சிற்றுண்டி, மோசமான இரவு உணவு என்கிறது ஆங்கிலப் பொன்மொழி. “எவ்வளவு நம்பினேன், ஏமாற்றிவிட்டானே” என்று புலம்புகிறவர்கள் இருக்கிறார்கள். நம்பினால்தான் ஏமாற்ற முடியும் என்பதை அவர்கள் அறிவதில்லை. பகையாளி செய்தால் யுக்தி, பங்காளி செய்தால் துரோகம். எதிரி செய்தால் யுக்தி, நண்பன் செய்தால் துரோகம். உடன் இருப்பவன் பறிப்பதே குழி, தூர இருப்பவன் செய்தால் அது அகழி என்கிற சின்ன தத்துவத்தை புரிந்துகொண்டால், எச்சரிக்கையாக இருந்து ஏமாறாமல் காத்துக்கொள்ள முடியும். துரோகிகள் எப்போதும் இருக்கிறார்கள், பூமியின் முகத்தில் புன்னகைத்துக்கொண்டும், சாமியின் மீது சத்தியம் செய்துகொண்டும். அவர்கள் விழுக்காடு இன்று அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை. வரலாற்றை வாசிப்பது, சத்திரியப் புருஷர்களையும், சாதித்த வீரர்களையும் பற்றி படித்து, புளங்காகிதம் அடைய மட்டும் அல்ல. துரோகத்தால் வீழ்ந்தவர்களையும், முற்றிலும் நம்பி பெற்றதையெல்லாம் தொலைத்தவர்களையும் பற்றி அறிந்து எப்போதும் விழிப்புடன் விளங்குவதற்காகவே. 'மனிதர்கள் தன்னலம் மிக்கவர்கள். அவர்களுடைய அத்தனை செயலும் ஆதாயத்தை நோக்கியே இருக்கும்' என்பது மார்க்ஸின் பார்வை. 'மனிதர்கள் மகத்தான மேன்மை கொண்டவர்கள்' – இது மகாத்மா காந்தியின் பார்வை. மகாத்மாவையும், மார்க்ஸையும் எங்கெங்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அறிபவர்களே அறிஞர்களாகிறார்கள். எத்தனை முறை ஏமாந்தாலும், நம்புவதற்கு தயாராகவே பலர் இருக்கின்றனர். காரணம், பேராசை. வியர்வை சிந்தாமல், கல்லாப்பெட்டி நிரம்பவேண்டும் என்கிற நப்பாசை. உழைக்காமல் உயரவேண்டும் என்கிற குறுக்குவழி. இவையே ஏமாற்றுபவர்களுக்கு மூலதனம். பொய் புனையும் போலி வேடங்கள், உண்மையைக் காட்டிலும் கவர்ச்சியாகக் கண் சிமிட்டுகின்றன. பித்தளை, தங்கத்தைக் காட்டிலும் நன்றாக மின்னி பித்தலாட்டம் செய்கிறது. எதையும் சந்தேகக்கண் கொண்டு பார். இது சாணக்கியரின் வாக்கு. துரோகச்சுவடுகள் – ஐயா இறையன்பு
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????
அறிவு பெற புத்தகம், பயிற்சிகள், அனுபவம் உதவுகிறது…..
பொருளாதாரம் & தேவைகளை பெற உழைப்பு தான் முழுமையான வழி ஆகிறது…..
அழகான பதிவு ஆழமான கருத்து நிச்சயம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா.
அறம் எப்போதும் தழைத்தோங்கும் என்பதுதான் அறம் ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா
????
நாம் தமிழர்
☝️சிறப்பு ♥️♥️??
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
சூப்பர் ?
????❤❤❤❤???
நாம் தமிழர் இருகூர்
??????
நாம் ஏமாந்துவிட்டோம் நாம் திமுகவை தேர்வு செய்யவில்லை மக்களே சாரயகடை முதலாளியை தேர்வு செய்திருக்கிறோம்
Migavum arumaiyana pathivu
????
?????2023
NTK NEXT 6000000 to 8000000%%%